பாபர் மசூதி இடிப்பு தினம்: வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி கோவை குனியமுத்தூரில் ஐமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குனியமுத்தூரில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: பாபர் மசூதி தினமான இன்று பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாவட்ட தலைவர் பெரோஸ்கான் தலைமை வகித்தார். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இஸ்லாமியர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது. பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

Newsletter

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...