சட்ட நாளில் கருத்தரங்கு நடத்தும் யுஜிசி முடிவை கண்டித்து கோவையில் திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

சட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 26ஆம் தேதியன்று, கருத்தரங்கு நடத்த முடிவெடுத்துள்ள யுஜிசியை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நவம்பர் 26ம் தேதி சட்ட நாளாக அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

"மன்னராட்சியின் மேன்மைகள், ஜனநாயக சிந்தனைகள்" ஆகிய இரு தலைப்புகளின் கீழ் கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வேதங்கள், மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம், இதிகாசம், புராணம் ஆகிய நூல்களில் காணப்படும் சிந்தனைகளை கொண்டு இந்த கருத்தரங்கு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

யுஜிசியின் இந்த கருதரங்கிற்கு பல்வேறு திராவிட கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட மாணவர் கழகம் சார்பில் யுஜிசி யின் இந்த கருத்தரங்கிற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் ராகுலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யுஜிசியை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...