கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: கோரிக்கைகளை ஒன்றிய பொது நிதியிலிருந்து நிறைவேற்ற வேண்டும் - கவுன்சிலர்கள் கோரிக்கை

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கிராம பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடுதல், அங்கன்வாடி கட்டடங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



கோவை: பொள்ளாச்சி சாலையில் உள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் நாகராணி தலைமையில் ஒன்றிய குழு கவுன்சிலர் கூட்டம் இன்று நடைபெற்றது.



வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும், அங்கன்வாடி கட்டடங்களை மேம்படுத்த வேண்டும், ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை வைக்கும் பணிகளை ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...