கோவையில் நாளை குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறும் - மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அறிக்கை

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார் தலைமையில்‌ நாளை மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது. பொதுமக்கள்‌ முகக்கவசம் கிருமிநாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியில் கோரிக்கை மனுக்களை அளிக்குமாறு ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நாளை (15.11.2022) செவ்வாய்‌ கிழமை காலை 11.00 மணி முதல்‌ நண்பகல்‌ 1.00 மணி வரை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மக்கள்‌ குறைதாக்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்து பயன்பெறலாம்‌.

மேலும்‌, இக்கோரிக்கை மனுக்களின்‌ மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

எனவே, இந்த மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்திற்கு வரும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...