திருப்பூர் பூங்கா சாலையில் விபத்தானவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த 108 ஆம்புலன்ஸால் பரபரப்பு

திருப்பூர் பூங்கா சாலையில் விபத்தில் படுகாயமடைந்த நபரை முதலுதவி சிகிச்சைக்கு அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஏற்க மறுத்ததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் பூங்கா சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.



அப்போது அந்த வழியாக வந்த 108 வாகனத்தை நிறுத்திய பொதுமக்கள் காயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தினர்.



ஆனால் பழுது பார்க்கும் பணிக்காக செல்வதாக கூறி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கிருந்து வாகனத்தை எடுத்து புறப்பட்டனர்.

பின்னர் அவர்களை வழிமறித்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனால் அந்த 108 ஆம்புலன்ஸ் மீண்டும் திரும்பி வந்து காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

108 ஆம்புலன்ஸ் முதலுதவிக்கு நபரை ஏற்க மறுத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...