வரைவு வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 14,82,079 ஆண்கள், 15,32,354 பெண்கள் மற்றும் இதரர் 539 பேர் என 30,14,972 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் இன்று (09.11.2022) வரைவு வாக்காளர் பட்டியலைவெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
மாவட்ட ஆட்சியர் வெளியிட்டவரைவு வாக்காளர் பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில் 14,82,079 ஆண்கள், 15,32,354 பெண்கள் மற்றும் இதரர் 539 பேர் என 30,14,972 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் புதிதாக 30,177 வாக்காளர்கள்சேர்க்கப்பட்டு உள்ளனர்.1,48,333 வாக்காளர்கள் இடமாற்றம், இறப்பு, ஆகிய காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 01.01.2023, 01.04.2023, 01.07.2023 மற்றும் 01.10.2023 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

இவ்விண்ணப்பங்கள் 09.11.2022 முதல் 08.12.2022 முடிய அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெறப்படும்.
மேலும், 12.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-இன் மூலமாகவும், பதிவினை நீக்கம் செய்ய படிவம் 7-இன் மூலமாகவும், ஏற்கெனவே உள்ள பதிவில் திருத்தம் செய்யவும், ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யவும் மற்றும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு உண்டான பகுதியிலிருந்து வேறொரு சட்டமன்றத் தொகுதிக்கு உண்டான பகுதிக்கு குடி பெயர்ந்து சென்றவர்கள் புதிய பகுதியில் பெயர் சேர்க்கவும் படிவம் 8-ஐ பயன்படுத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய www.nvsp.in எனும் இணைய முகவரியின் வாயிலாகவோ அல்லது Voters' Helpline App எனும் ஆண்ட்ராய்ட் செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மனுக்களை பதிவேற்றம் செய்யலாம். பொது சேவை மையங்களிலும் இணைய வழியில் பதிவு செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2023 அன்று வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.