கோவை கொடிசியாவில் நவ.27ஆம் தேதி பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் பிரமாண்ட இசை கச்சேரி

வரும் நவ.27ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் PAYTM, BOOK MY SHOW உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளங்களிலும், விலை ரூ.500 - ரூ.25,000 வரை இருக்கும் என தகவல்.


கோவை: கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் வரும் நவம்பர் 27ஆம் தேதி, அன்னபூர்ணா மசாலா வழங்கும் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பிரமாண்ட இசை கச்சேரி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழாஇன்று நடைபெற்றது. இந்த அறிமுக விழாவில், அன்னபூர்ணா மசாலா இயக்குநர் விஜய் பிரசாந்த், குரோபக்ஸ் நிறுவனர் ரமேஷ், அரோமா பொன்னுசாமி , லட்சுமி செராமிக் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டு, நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து அருண் ஈவென்ட்ஸ் அருண் மற்றும்ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது, அருண் ஈவென்ட்ஸ் மற்றும் வி 2 க்ரியேஷன்ஸ் இணைந்து இந்த நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்கின்றன.

வரும் 27 ஆம் தேதி மாலை 6 மணியளவில் துவங்கும் இந்த கச்சேரி சுமார் 3 மணி நேரம் நடைபெறவுள்ளது. கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு 30,000 மேற்பட்ட ரசிகர்களுடன் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளர்கள் சர்வதேச இசை கச்சேரிகளுக்கு இணையாக நடத்த வேண்டுமென முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

சித் ஸ்ரீராமுடன் அவருடைய இசை குழுவினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இசை துறையில் பெரும் படைப்பாளிகளிடம் பணி புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் ஒளி மற்றும் ஒலிஆகியவற்றின் தரம் சர்வதேச நிகழ்வுகளுக்கு சமமானதாக இருக்க வெளிநாட்டில்இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம், லைட் சிஸ்டம் இந்த கச்சேரியில் உபயோகிக்கப்பட்ட உள்ளது.

இம்முறை மேடை அருகே ரசிகர்கள் நின்று பாடி ஆடும் 'பேன் பிட்' இடம்பெறுகிறது. சுமார் 10,000 பேர் நிற்க கூடிய வகையில் அமைப்புகள் இருக்கும்.நிகழ்விற்கு இடையே ரசிகர்களுடன் அவ்வப்போது சித் ஸ்ரீராம் உரையாடல் இருக்கும்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளின் விலை ரூ. 500 முதல் ரூ. 25,000 வரை இருக்கும். டிக்கெட்டுகள் PAYTM INSIDER, BOOK MY SHOW, VMR GROBUX, ரோட்டரி கேலக்ஸி சங்கத்தில் கிடைக்கும்.மேலும் நிகழ்வு நடைபெறும் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்படவுள்ள கவுண்டர்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அருண் ஈவென்ட்ஸ், வி 2 க்ரியேஷன்ஸ் மற்றும் வீ.எம்.ஆர் குரோபக்ஸ் ஒருங்கிணைத்து நிகழ்வை நடத்துகின்றனர். எஸ்.எஸ்.வி.எம் நிறுவனங்கள், ஸ்கோடா எஸ்.ஜி.ஏகார்ஸ், லட்சுமி செராமிக்ஸ் மற்றும் வசந்த் & கோ நிறுவனம் முக்கிய ஸ்பான்சர்களாக உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு இடையே இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்வு குறித்து சித் ஸ்ரீராம் பேசிய ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.

டிக்கெட் தொடர்புக்கு : 0422 3501888, 9787100711,9787800711

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...