சிறுமுகையில் பட்டப்பகலில் பட்டா கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவர்கள், காரமடை, கோவில்பாளையம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவர்கள் என 10 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டு, மொத்தம் 114 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் 3 காவல் நிலையங்களில் ஒரே நாளில் முக்கிய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு 114 சவரன் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவிக்கையில், "சிறுமுகை டாஸ்மாக் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விடியோ வைரல் ஆன நிலையில், கோவை மற்றும் புதுக்கோட்டை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை கைது செய்துள்ளோம்.

இவர்கள் மீது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நபர்களாக உள்ளனர்,இவர்கள் மொத்தம் 5 வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்களிடம் இருந்து 14.5 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே போல அண்மையில்,காரமடை மற்றும் பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 3 வழக்குகளில் தேடப்பட்டு வந்த திருநெல்வேலியை சேர்ந்த சுரேஷ் (33), தென்காசியை சேர்ந்த சப்ஜெயில் ராஜா (19), தூத்துக்குடியை சேர்ந்த மருதுபாண்டி (27), ஆகிய மூவரையும் கைது செய்த தனிப்படை போலீசார்72 சவரன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.
இதே போல, கோவில்பாளையம் பகுதியில் 3 வீடுகளில் திருடிய வழக்கில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சாலமன் (20), தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (21). ஆகிய இருவரை கைது செய்து 27.5 சவரன் நகையை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆக, கோவை புறநகரில் ஒரே நாளில் 114 சவரன் நகை பறிமுதல் செய்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமுகையில் பட்டப்பகலில் பட்டா கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவர்கள், மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவர்கள் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப்படும்.
வெளி மாவட்டங்களில் இருந்து கோவையில் வந்து தங்கும் ரவுடிகளை கண்காணிக்க உட்கோட்டத்திற்கு ஓரு குழு என நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்", என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரயணன் பாராட்டினார்.