அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் வழங்கினார்


கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று  (04.02.2017) பள்ளிக்கல்வித்துறையின் மூலம் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்  தலைமை வகித்தார்.  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊரக வளர்ச்சித்துறை நிதியின் கீழ் ரூ.45லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஆய்வுக்கூடகத்தினையும், ரூ.25லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கணினி ஆய்வுக்கூடத்தினையும் திறந்து வைத்து மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மதிவண்டி மற்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பண்ணிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வினா வங்கி தொகுப்பினை வழங்கினார். 



பின்னர் அவர் பேசுகையில்,

மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கி வைத்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தொலை நோக்குப்பார்வையுடன் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஒரு நாட்டையும், ஒரு சமுதாயத்தையும் முன்னேற்றுவது கல்வி மட்டும்தான் என்பதை உணர்ந்த தமிழக அரசு, மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்ப கல்வி முதல் கல்லூரி கல்வி வரை எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் திட்டங்களனைத்தும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவை சார்ந்த துறைகளின் மூலம் உடனுக்குடன் பெற்று வழங்கப்படுகின்றது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 62,618 பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு ரூ.14.32 கோடி மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சேர்ந்த 22,113 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7,01 கோடி மதிப்பீட்டிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 22 மாணவ, மாணவியர்களுக்கு தலைசிறந்த பள்ளியில் சேர்ந்து படிக்க ரூ.5.28 இலட்சம் நிதியுதவிகளும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 48 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.72 ஆயிரம்மும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 48 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.144 இலட்சமும் பரிசுத்தொகையும், தந்தை பெரியார் விருதாக 54 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.38.80இலட்சம் பரிசுத்தொகையும், பேரறிஞர் அண்ணா விருதாக 52 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.38 லட்சமும் பரிசுத்தொகையும், கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகையாக மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர்களுக்கு ரூ.82.87 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.3.92 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம், 1,74,755 ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.91.06 கோடி கல்வி உதவித்தொகையும், 7,925 மாணவ மாணவியர்களுக்கு சீருடைகளும், 1986 மாணவ, மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்களும், 2,631 மாணவ, மாணவியர்களுக்கு குறிப்பேடுகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவிடுதிகளில் தங்கிப் பயிலும் 1,802 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2.70 இலட்சம் மதிப்பீட்டில் போர்வைகளும் வழங்கப்பட்டுள்ளன. 

கோயம்புத்தூர் மாவட்டத்தில், 55,094 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.8670 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகளும், 11,58,384 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்களும், 10,15,574 மாணவ, மாணவியர்களுக்கு பாடக்குறிப்பேடுகளும், 87,712 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.28.22கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளும், 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் 5,09,455 மாணவ, மாணவியர்களுக்கு தலா 4 செட் வீதம் விலையில்லா வண்ணச்சீருடைகளும், வருவாய் ஈட்டும் தாய், தந்தையர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்தம் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.50,000ஃ-  வழங்கும் திட்டத்தின் கீழ், 208 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.04 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை 60 மாணவக் கண்மணிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பில் 92.95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

அதேபோல், இந்த ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு அரசு பள்ளிகளுக்கும், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும்பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றைக்கு மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 194 மாணவ மாணவியர்களும்,மன்பஉல் உலூம்  மேல்நிலைப்பள்ளியில் 119 மாணவ மாணவியர்களுக்கும், தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 370 மாணவ மாணவியர்களுக்கும் என மொத்தம் 683 மாணவ மாணவியர்களுக்கும் ரூ.26.44லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற பள்ளிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. மற்றும்  மாவட்டத்தில் மாணவ மாணவிகள் சிறப்பாக கல்வி பெற அனைத்துவகை உட்கட்டமைப்பு வசதிகளுடன் பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்பொழுது மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்கம் கட்டித்தர கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.30.00லட்சம் மதிப்பீட்டில் கட்டித்தர பணிகள் மேற்கொள்ளப்படும், இதேபோல் மாணவ மாணவியர்களின் கல்விக்காக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய அரசு தயாராக உள்ளது அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி எல்லோரும் சிறந்து விளங்கிட வேண்டும் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், அம்மன் கே.அர்ச்சுணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சந்திரசேகரன், மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...