காவல்துறை அமைச்சு பணியாளர் சங்க தேர்தல் - கோவையில் விறுவிறு வாக்குப்பதிவு

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் அலுவலகங்களிலும் இன்று நடைபெற்று வருகிறது.



இந்த தேர்தலில் கோவையில் உள்ள கோவை மாநகர காவல் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், கோவை சரக அலுவலகம், மேற்கு மண்டல அலுவலகம், காவலர் பயிற்சி பள்ளி மற்றும் கோவைபுதூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணி உள்ளிட்ட அலுவலகங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



இந்த தேர்தலில் கோவை மாநகர காவல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் அருள், மாநில துணைத்தலைவர் (மாவட்டம்) பொறுப்பிற்கு போட்டியிடுகிறார்.

கோவையில் உள்ள அனைத்து காவல் அலுவலகங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் (5.11.2022) சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...