வால்பாறை வார்டு எண் 4 பகுதியில் நகர மன்ற தலைவர் முன்னிலையில் இன்று கிராம சபா கூட்டம் நடைபெற்றது

கோவை வால்பாறையில் வார்டு எண் 4 ஸ்டேன்மோர் ஆத்து மட்டம் பகுதியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுகள் அளித்தனர்.


கோவை: தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. கிராம சபை கூட்டமானது உள்ளாட்சி தினமான நவம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெறும்.



இந்த கிராம சபை கூட்டத்தின் நோக்கமானது கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவது என மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் நடப்பதாகும்.



இன்று கோவை வால்பாறையில் 4 வது வார்டு பகுதியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்கோட்டத்தில் வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் நகராட்சி மேலாளர் சலாவுதீன் ஆகியோர்களின் முன்னிலையில் ஸ்டேன்மோர் ஆத்து மட்டம் பகுதியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 4 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டேண்மோர் ஆத்துமட்டம் ஆகிய பகுதியிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர்.



பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை மனுக்களாக எழுதி வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் அவர்களிடமும் நகராட்சி ஆணையாளர்களிடமும் நகர மன்ற தலைவர் அவர்களிடமும் கோரிக்கை மனுவை வழங்கினார்.

இந்த கோரிக்கை மனுவிற்கு உடனடியாக நகர மன்ற கூட்டத்தில் விசாரணை செய்து உடனடியாக தீர்வு காணப்படும் என்று நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....