போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா வியாபாரி - பாக்கெட் பாக்கெட்டாக ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை - திருச்சி சாலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், கஞ்சா கடத்திச் சென்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் கோவை மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட காவல் காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சூலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் போலீசார், கோவை - திருச்சி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற நபரை பிடித்து சோதனை செய்தனர்.

அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1.150 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அவர், இருகூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் தனபால் (24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இளம் சமுதாயத்தினர் தற்செயலாகவோ, தவறுதலாக போதை பொருட்களை பயன்படுத்தி அவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி விடுகிறார்கள். வாழ்க்கை பாதையை மாற்றும் போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 94981-81212 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், வாட்ஸ் ஆப் மூலம் 7708-100100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...