ஈஷாவின் 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் கீரை சாகுபடி களப் பயிற்சி - 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

கோவை செம்மேட்டில் ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் "மண் காப்போம்" இயக்கம் சார்பில் கீரை சாகுபடி களப் பயிற்சியில், சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட கணிசமான வருமானம் பெறும் வகையிலான தொழில்நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.



கோவை: கோவையில் அக்டோபர் 29ஆம் தேதி ஈஷாவின் "மண் காப்போம்" இயக்கம் சார்பில் விவசாயிகள் தினந்தோறும் வருமானம் ஈட்ட உதவும் வகையிலான கீரை சாகுபடி குறித்த களப் பயிற்சி நடைபெற்றது.



செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.



திண்டிவனத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியும், பயிற்றுநருமான ருத்ரன் (My harvest) விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

சிறிய அளவு நிலம் வைத்திருப்பவர்கள் கூட கீரை விவசாயத்தில் கணிசமான வருமானம் எடுக்க வழிவகை செய்யும் நோக்கில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வில் கீரை சாகுபடியில் வகுப்பறை மற்றும் செய்முறை களப் பயிற்சி வழங்கப்பட்டது.

இதில், விவசாயிகள் தங்கள் கைகளாலேயே விதைகளை விதைத்தும் நாற்றுகளை நட்டும் அனுபவத்தை பெற்றுக் கொண்டனர். கீரை சாகுபடியில் உர மேலாண்மை மற்றும் இயற்கை வழியில் நோய் கட்டுப்பாடு பற்றியும் இந்த பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு முன்னதாகவே கீரை சாகுபடியில் அனுபவம் இருந்தாலும் இந்த பயிற்சியின் மூலம் கீரை சாகுபடியில் தாங்கள் ஏற்கனவே செய்த தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் இறுதியில் பல வகையான கீரைகள் அதன் நன்மைகள் மற்றும் சாகுபடி நுட்பங்களை குறித்த பயிற்சி வழங்கப்பட்டதுடன், பல கீரை ரகங்களின் விதைகள் மற்றும் நாற்றுகள் நடவிற்காக வழங்கப்பட்டன.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...