திருப்பூர் மாவட்டத்தில் சித்த மருத்துவமனை மற்றும் தாய் சேய் நல விடுதி ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம.சுப்ரமணியம் துவக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டத்தில் 2 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவடைந்த சித்த மருத்துவ மனை மற்றும் தாய் சேய் நல விடுதியை திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம.சுப்ரமணியம் காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: வெள்ளகோவில் அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற சித்த மருத்துவமனை மற்றும் தாய் சேய் நல விடுதி துவக்க விழாவில் இன்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம.சுப்ரமணியம் கலந்து துவங்கி வைத்தார்.



பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

12 மருத்துவமனை கூடுதல் கட்டமைப்பு பணிகளுடன் துவக்கி வைக்கப்பட்டுள்ளது, இரண்டு சித்த மருத்துவமனைகள், 2.97 கோடி மதிப்பிலான 13மருத்துவ கட்டிடங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காங்கேயம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த 12 கோடி மதிப்பில்பொதுப்பணித்துறை சார்பில் பணிகள் துவக்கப்படும் எனவும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக தாராபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த 24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த பணிகள் 15 ம் தேதிதுவங்கும் எனவும் டெல்லியில் நகர்புற நல்வாழ்வு மையங்கள் சிறப்பாக செயல்படுவதை போல தமிழக முதல்வர் 110 அறிவிப்பின் கீழ்

உடனடியாக நிறைவேற்றப்படும் அதன்படி 750 மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.



திருப்பூர் நகராட்சியில் 35 மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது உடுமலையில் 1 என 36 பணிகள் நடைபெற்று வருகிறது. காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு 1.25 கோடி மதிப்பிலான ஆர்.டி.பிசி ஆர் உபகரணங்கள் அமைக்கப்படுகிறது.திருப்பூரில் ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது.

கர்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. அந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. எனவே ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டாலும் அனைவருக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்கப்படும்.

ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் செய்வது சாத்தியமற்றது எனவும் முறையாக தேர்வின் அடிப்படையில் பணியில் சேர்பவர்களுக்கே இட ஒதுக்கீடு கிடைக்கும் நீதிமன்றமும் இதையே வலியுறுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...