திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் சமரசம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் இன்று நடைபெற்றது .

இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர். மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்குமாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித முறையான நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டினர்.

கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளவில்லை எனவும் அதேபோல் விவசாயிகள் இரு பிரிவுகளாக பிரித்து பி ஏ பி பாசன விவசாயிகளுக்கென தனி ஒரு கூட்டமும் நடத்துவதாக குற்றம் சாட்டிவிவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .



இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...