கோவை உக்கடம்‌ பெரிய குளக்கரையில்‌ 250 மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியினை கோவை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தனர்

கோவை உக்கடம் வார்டு அலுவலகத்தில் இன்று வருகை தந்த மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர் தூய்மைபணியாளர்களுக்கு சீருடைகள்‌, குளியல்‌ சோப்பு, காலணி மற்றும் துண்டு ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தனர்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, உக்கடம்‌ பேருந்து நிலையம்‌ வார்டு அலுவலகத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ இனறு வருகை தந்தனர்.

உக்கடம்‌ வார்டு அலுவலகத்தில்‌ உள்ள 70 தூய்மைப்பணியாளர்களுக்குசீருடைகள்‌, குளியல்‌ சோப்பு, காலணி, துண்டு ஆகியவற்றை வழங்கினார்கள்‌.



இதை தொடர்ந்து மாநகராட்சியில்‌ பணியாற்றும்‌ 2306 தூய்மை பணியாளர்களுக்கும் சீருடைகள்‌ வழங்கப்படுகிறது.



அதன்‌ பின்னர் உக்கடம்‌ பெரிய குளக்கரையில்‌ 250 மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியினை, தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌ ,மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா, மண்டல தலைவர்கள்‌ ,மீனாலோகு, ரெ.தனலட்சுமி, பணிக்குழு தலைவா்‌ சாந்திமுருகன்‌, வரிவிதிப்பு மற்றும்‌ நிதிக்குழுத்‌ தலைவர்‌ வி.பி.முபசீரா, மாமன்ற உறுப்பினர்கள்அகமது கபீர், பாபு, நகர்நல அலுவலா்‌ மரு.பிரதப்‌ , வா.கிருஷ்ணகுமார்‌, உதவி ஆணையார்கள்‌ மகேஷ்கனகராஜ்‌, அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்கள்‌ கருப்பசாமி, புவனேஸ்வரி, சுகாதார அலுவலர்கள்‌ராமச்சந்திரன்‌, ராமு, சுகாதார ஆய்வாளர்‌ தனபால்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...