கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - என்.ஐ.ஏ முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ பதிவு செய்துள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், திட்டமிட்டு வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேசா முபின் திட்டமிட்டதாகவும், அவரது வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.


கோவை: கோவையில் கடந்த 23 ஆம் தேதி கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே சாலையில் சென்ற கார் வெடித்து சிதறியதில் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தமிழக டி.ஜி.பி, கூடுதல் டிஜிபி என உயர் அதிகாரிகள் நேரில் விசரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் வெடி பொருட்களுடன் கார் சென்றதும், உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் வெடி பொருட்கள் இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், 9 தனிப்படை அமைத்து மேற்கொண்ட விசாரனையின் போது ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்த அவரது உறவினர்கள் நண்பர்கள் என 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தமிழக முதல்வர் இந்த வழக்கை என்.ஐ. ஏ. விசாரணைக்கு பரிந்துறை செய்தார். பரிந்துறையை ஏற்ற என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அதைச்சகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், என்.ஐ.ஏ கோவை கார் வெடிப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், திட்டமிட்டு வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேசா முபின் திட்டமிட்டதாகவும், அவரது வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், கருப்பு பவுடர், பட்டாசு பியூஷ், ஆக்ஸிஜன் சிலிண்டர், சிவப்பு பாஸ்பரஸ், அலுமினிய பவுடர், அறுவை சிகிச்சை பிளேடு, கிளாஸ் மார்பில், மற்றும் பெட்டரிகள், நோட்டு புத்தகம் மற்றும் ஜிஹாத் தொடர்பான குறிப்பு உட்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடபட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏ சென்னை ஆய்வாளர் விக்னேஷ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...