கந்த சஷ்டி விழாவையொட்டி கோவை - பழனி இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோவை - பழனி இடையே ஒரு வாரத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு மக்கள் பிரதிநிதிகள் அழுத்தம் கொடுக்க பக்தர்கள் கோரிக்கை.



கோவை: தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடான பழனி மலை முருகன்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

ஆன்மீக சுற்றுலா தலமான இந்த கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் அங்கு ஞாயிற்றுக்கிழமையன்று கந்தசஷ்டிவிழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் ரயில் சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதனால் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் மூலம் பழனி ரயில் நிலையத்திற்கு ஏற்கனவே நாளொன்றுக்கு சராசரியாக லட்சத்திற்கும் மேல் வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் கந்தசஷ்டி விழா மற்றும் விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பழனி ரயில் நிலையத்தில் 24 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்தும் அளவுக்கு 3நடை மேடைகளும், சரக்கு போக்குவரத்துக்கு ஒரு நடை மேடையும்உள்ளது. எனவே ரயில்களை நிறுத்துவதற்கு போதுமான பிளாட்பாரம்பழனியில் இருப்பதால்சிறப்பு ரயில்கள் இயக்குவதில் எந்த சிரமும் இருக்காது.

இதனிடையே திண்டுக்கல் - பழனி -பொள்ளாச்சிரயில் வழித்தடத்தில் இரவு நேரப் பணியாளர்கள் இல்லாததால் இரவு நேரத்தில் இந்த வழித்தடங்களில்சிறப்பு ரயில்களை இயக்குவதில்சிரமமான சூழல் உள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது, தற்போது திண்டுக்கல் - பழனி -பொள்ளாச்சிரயில் வழித்தடத்தில் செந்தூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ், சென்னை பாலக்காடு எக்ஸ்பிரஸ், மதுரை கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், அமிர்தாஎக்ஸ்பிரஸ்,திருநெல்வேலி மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்உட்படமொத்தம் 5ரயில்கள்இயங்கி வருகின்றன.

இரவு நேர பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்து 24 மணி நேரமும் ரயில்கள் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில்கள் என்ற வீதத்தில் தொடர்ந்து ரயில்களை இயக்க வேண்டும்.

இந்த சிறப்பு ரயில்கள் லட்சக்கணக்கானபக்தர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு தெற்கு ரயில்வே துறைக்கும் நல்ல வருமானத்தை கொடுக்கும். எனவேதிண்டுக்கல் கோயம்புத்தூர்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தெற்கு ரயில்வேக்கு அழுத்தம் கொடுத்து கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...