ஐ‌ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையிலான உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. 1998 குண்டு வெடிப்பு சம்பவம் போல நடந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே, இனியாவது விழித்துக் கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும் - எஸ்.பி. வேலுமணி.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளின் பட்டியல் தயாரித்து முதல்வருக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இதில், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக‌ சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி,



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த 10 கோரிக்கைகள் கூட்டம் நடைபெற்றது. இன்று உறுப்பினர் மேம்பாட்டு நிதி பாதி தான் வந்துள்ளது. மீதம் உள்ள பாதி நிதியை முழுமையாக விடுவிக்க வேண்டும்.

கோவையில் எல்லா சாலைகளும் பழுதடைந்துள்ளது. சாலைகளை செப்பனிடும் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமான கோரிக்கையாக வைத்துள்ளோம்.

கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. 1998 குண்டு வெடிப்பு சம்பவம் போல நடந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

20 வருடங்களுக்கு முன்னர் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் கோவை மாநகர் பின்னோக்கி சென்றது. இதனால் வளர்ச்சி பாதித்தது.

அந்த குண்டு வெடிப்பு பாதிப்புகள் இன்னும் உள்ளது. இதனால் இரு சமூகமும் பாதிக்கப்பட்டது. அந்த தாக்கத்திலிருந்து இப்பொழுதுதான் கோவை மீண்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உளவுத்துறை ஐ‌ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் எந்த வேலையும் பார்க்கவில்லை. உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.

இந்த அரசு, எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே செய்கின்றனர். முதலமைச்சருக்கு பணம் வாங்கித் தரும் வேலையை மட்டும் ஜஜி டேவிட்சன் செய்கிறார்.

எனவே, இனியாவது விழித்துக் கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக ஜமாத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, எந்த மதத்தையும் ஒதுக்கக்கூடாது.

கோவை மக்கள் அமைதியை விரும்புகிறோம். மக்களை பாதுகாக்கும் வேலையை காவல்துறை பார்க்க வேண்டும், கோவையை காப்பாற்ற வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...