கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்

கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தர்ராஜன் கோவை அமைதியாக இருக்க வேண்டும் எனவும் பாஜக கடையடைப்பு போராட்டம் குறித்து "ஜனநாயக நாட்டில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது போல் எதிர்ப்பை தெரிவிக்க இதுவும் ஒரு வழிமுறை” என தெரிவித்தார்.



கோவை: விமான நிலையத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதுதான் தனது எண்ணம் என தெரிவித்தார். கோவைக்கு வந்துள்ளதால் அந்த கருத்தினை தான் தன்னால் தற்பொழுது சொல்ல முடியும் என்றார்.



மேலும் பாராபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு NIA விசாரணை உதவி செய்யும் எனவும் அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எனது கருத்து என தெரிவித்தார்.

இதை ஆளுநராக இல்லாமல் கோவையின் மருமகளாய் கூறுவதாகவும், கோவை மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு வரவேண்டும் என கூறினார். இச்சம்பவத்திற்கு முன்பே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அதனை முற்றிலும் ஆராய்ந்தது இதை போன்ற இடங்கள் எங்கும் இல்லை என்பதை தமிழக காவல் துறை உறுது செய்ய வேண்டுமென கூறினார்.

கார் வெடிக்கும் வரை நமக்கு எப்படி தெரியாமல் போனது என ஆராய வேண்டும் அதில் முழு கவனம் செலுத்த வேண்டும் மேலும் குண்டு வெடித்து பாஜக சொல்லி தான் மக்கள் பீதி அடைய வேண்டுமா? மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகளை பார்த்து அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளதாக கூறினார். மற்றவர்களை குறை சொல்லாமல் என்ன குறை என பார்ப்பது நல்லது .

பாஜக கடையடைப்பு போராட்டம் அறிவித்தது குறித்த கேட்ட கேள்விக்கு:-

ஜனநாயக நாட்டில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது போல் எதிர்ப்பை தெரிவிக்க இதுவும் ஒரு வழிமுறை என பதில் அளித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையின் மீது NIA விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறியது குறித்த கேள்விக்கு அரசியல்வாதியாக பதில் அளிக்க தான் விரும்பவில்லை என தெரிவித்தார்.

மேலும் கட்சியின் தலைவர்கள் எதிர்க்கட்சி என சண்டை போட்டுக் கொள்ளுங்கள் அதைப்பற்றி தனக்கு கவலை இல்லை என தெரிவித்த அவர் எதுவாக இருந்தாலும் பாராபட்சமற்ற அணுகுமுறை இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழ் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழ் சரியாக கையாளப்பட வேண்டும் என்பதே தமிழிசையின் ஆசை என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...