கோவையில் இரவு பகலாக ரோந்து மற்றும் வாகன சோதனையில் போலீசார்..!

சுந்தராபுரம், போத்தனூர் சந்திப்பு, ஆத்துப்பாலம், உக்கடம், டவுன்ஹால், புல்லுக்காடு, ரயில் நிலையம், சுங்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் காவல் ஆய்வாளர் தலைமையில் தலா 30 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொண்ட புலன் விசாரணையில் கோவையில் சதி திட்டம் அரங்கேற்ற திட்டமிட்டதும், இறந்த முபின் வீட்டில் கிலோ கணக்கில் வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ள நிலையில், நேற்று இரவு இறந்த முபினின் உறவினரான அஃப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில், கோவையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், புதிய காவல் நிலையங்கள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது போன்றவற்றை குறித்து ஆலோசிக்கப்பட்டது.



அதனடிப்படையில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகள் போலீஸ்காரன் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 



குறிப்பாக சுந்தராபுரம், போத்தனூர் சந்திப்பு, ஆத்துப்பாலம், உக்கடம், டவுன்ஹால், புல்லுக்காடு, ரயில் நிலையம், சுங்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த சோதனைச் சாவடிகளில் இரவு, பகலாக காவல் ஆய்வாளர் தலைமையில் தலா 30 காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 



மாநகர பகுதிக்கு வரும் அனைத்து இரு சக்கர, கார், சரக்கு வாகனங்கள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், உக்கடம் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை (RAF) வீரர்களும், கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...