கோவையில் நிலவும் பதற்றமான சூழலில் பந்த் தேவையற்றது - சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…!

கோவையில் பதற்றமான சூழல் நிலவி வரும் தருணத்தில், பாஜக அறிவித்துள்ள பந்த், எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல உள்ளது. இது குறித்து அனைத்து கட்சியினர், ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக போலீசார் கைது செய்தது பாராட்டுதலுக்குரியது என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில், அருணா ஜெகதீஸ் ஆணையம் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துறை செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.இந்த சம்பவத்தை அதிகாரிகளின் அலட்சியமாக மட்டுமே பார்க்க கூடாது. பன்னாட்டு நிறுவனத்திற்கு கைபாவையாக செயல்பட்ட அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்தில், விபத்தாக நடக்கவில்லை என்றால் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும். சம்பவம் நடந்தவுடன் காவல் துறை டிஜிபி நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்துள்ளார். மேலும், விரைவில் கைது நடவடிக்கை, அவர்களது பின்னனியை கண்டுபிடித்தது பாராட்டதக்கது.

பன்னாட்டு விசாரணை இருப்பதால் தமிழக முதல்வர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துறை செய்தது வரவேற்கதக்கது.

தற்போது கோவையில் உள்ள பதற்றமான சூழலில், பாஜக பந்த் அறிவிப்பு அவசியமற்றது. இது குறித்து அனைத்து கட்சியினரைஅழைத்து பேச ஆட்சியரிடம் பேசவுள்ளோம். இம்மாதிரியான சூழலில் அரசியல் கட்சியினர் தீயணைப்பு நிலையங்கள் போல செயல்பட வேண்டும். பதற்றமான சூழலில் பாஜக அறிவித்துள்ள பந்த் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...