கோவையில் தூய்மைப்பணியாளர்கள்‌ கோரிக்கைகள்‌ குறித்து தொழிற்சங்கங்கள்‌ உடன்‌ பேச்சுவார்த்தை நடப்பு

கோவையில் குப்பை எடுப்பதற்கு முதற்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள்‌ வாங்கப்படும் என தூய்மைப்பணியாளர்கள்‌ கோரிக்கைகள்‌ குறித்து நடைபெற்ற தொழிற்சங்கங்களுடான பேச்சுவார்த்தையில் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ உறுதியளித்துள்ளார்.



கோவை: மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ நேற்று கோயம்புத்தார்‌ மாநகராட்சிக்கு சொந்தமான பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ கோரிக்கைகள்‌ குறித்து தொழிற்சங்கங்கள்‌ உடன்‌ பேச்சுவாத்தை நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பணியாற்றும்‌ தூய்மைப்பணியாளா்களின்‌ வருகைப்‌ பதிவேடு காலை 7.00 மணி வரை மட்டுமே வருகை பதிவு செய்து கையொப்பமிட அனுமதிக்கப்படும்‌.

மேலும் மாநகராட்சியில் பணியாற்றும்‌ தூய்மைப்பணியாளர்களுக்கு குப்பை எடுப்பதற்கு உதவும் விதமாக முதற்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள்‌ வாங்கப்படும்‌.

தூய்மைப்பணியாளர்களுக்கான வார விடுமுறை ஒருநாள்‌ சுழற்சி முறையில்‌ விடுமுறை வழங்கப்படும்‌.

ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களின்‌ ஊதிய உயர்வு குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சார்பில்‌ இறுதி முன்மொழிவுகள்‌ வருகின்ற நவம்பர்‌ 5ம்‌ தேதிக்குள்‌ அனுப்பி வைத்து உரிய தகவல்‌ தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு தெரிவிக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு. பிரதாப்‌ தெரிவித்தார்‌.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா, பொது சுகாதாரக்குழு தலைவர்‌ மாரிச்செல்வன்‌, தொழிற்சங்கங்களின்‌ கூட்டமைப்பு பிரதிநிதிகள்‌ பங்கேற்றனர்‌.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...