கோவை வால்பாறை 10வது வார்டு: வால்பாறை காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

வால்பாறை காவல்துறை சார்பில் 10வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கஞ்சா போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் தலைமையில், பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இதை தொடர்ந்து வால்பாறை பகுதியில் உள்ள 21 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று 10வது வார்டுக்கு உட்பட்ட சிறுவர் பூங்கா பகுதியில் நகர மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் காவல்துறை ஆய்வாளர் கற்பகம் பொது மக்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டார் போதை பொருட்கள் பயன்படுத்த மாட்டோம் என்றும் அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் எல்.பி.எஃப் தோட்ட தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் கோலிக்கடை கணேசன் மற்றும் உதவி ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...