பங்களாதேஷில் இருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் - திருப்பூர் போன்ற உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பு

வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படும் பங்களாதேஷ் ஆடைகளால், உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட தொழில் வல்லுநர் பிரிவு குற்றச்சாட்டு.


திருப்பூர்: பங்களாதேஷில் இருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படும் ஆடைகளால் திருப்பூர் போன்ற உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட தொழில் வல்லுநர் பிரிவு சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் உள்நாட்டு உற்பத்திக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பங்களாதேஷ் இறக்குமதி ஆடைகள் வரியில்லா ஒப்பந்த மூலம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதற்கு வரியில்லா ஒப்பந்தத்தை சில நாடுகளுடன் ஏற்படுத்தினர். அதே சமயத்தில் இறக்குமதி செய்யும் பொழுது சில பொருட்களுக்கு மறைமுகமாக 12 சதவீதம் வரி (countervailing duty) என்பதை ஜவுளி ஆடைகளின் மீது விதித்து இருந்தார்கள்.

அதன் மூலம் இந்தியாவில் இருந்து ஒருவர் டி-ஷர்ட் போன்ற ஜவுளி வகைகளை பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்யும் பொழுது 12 சதவீதம் இறக்குமதி வரி செலுத்தி விட்டு தான் ஆடைகளை இறக்குமதி செய்ய முடியும் என்று இருந்தது.

அதனால் இந்திய ஆடை உற்பத்தியாளர்களுக்கு எந்தவித போட்டியும் இல்லாமல் இருந்தது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்த பிறகு ஜிஎஸ்டி என்ற பெயரில் IGST மூலம் இந்த 12 சதவீத வரியையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று ஆன பிறகு தான் அதிகப்படியான ஜவுளி ரகங்கள் பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன் மூலம் இந்தியாவின் உற்பத்தியாளர்கள் குறிப்பாக திருப்பூர் போன்ற உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறது.

அவசரமாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் திருப்பூரின் உற்பத்தி இது போன்ற காரணங்களால் பாதித்து வருகிறது என்பதை சிலர் மறைத்து காங்கிரஸ் தான் வரியில்லா ஒப்பந்தத்தை கொண்டு வந்தது என்று மேம்போக்காக சொல்லி வருகிறார்கள்.

ஆனால் 12 சதவீதம் மறைமுக வரியை ஜவுளியின் மீது பங்களாதேஷிடம் விதித்து ஜவுளி துறைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்தது காங்கிரஸ்தான். வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மன்மோகன் சிங் அரசு வங்கதேசத்திற்க்கு அளித்து இருந்தாலும் கூட 12.6 % கவுன்டர்வயலிங் டூட்டி எனப்படும் இறக்குமதிக்கான வரியை நீக்குவதற்க்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

அதுவே இந்திய - திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருந்தது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஒரு நாடு ஒரு வரி என்ற கோட்பாட்டின் கீழ் ஜிஎஸ்டி வரி விதிப்பில் அந்த 12.6 சதவீதம் கவுன்டர்வயலிங் டியூட்டி என்பது நீக்கப்பட்டு IGST அறிமுகப்படுத்தப்பட்டது.

IGST பொருத்தவரை இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் காண வரியை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று ஆன பிறகு எந்தவித இறக்குமதி வரியும் இல்லாமல் எளிதாகிவிட்டது. 2017-18 ஜிஎஸ்டி வந்த பிறகு மிக அபரிமிதமாக இங்கே பங்களாதேஷில் இருந்து ஜவுளி ரகங்கள் இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்து உள்ளது.

ஆனால் இன்றைய பாரதிய ஜனதா அரசின் தவறான ஜிஎஸ்டி நடைமுறை அதை சுக்குநூறு ஆகிவிட்டது என்பதை மறைத்து விடுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...