கோவை அன்னூரில் சூரிய கிரகணத்தின் மீதான மூடநம்பிக்கையை போக்க கோழி குழம்பு, சோறு சமைத்து பரிமாறிய த.பெ.தி.கவினர்

சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கை, அச்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அன்னூர் அடுத்த நல்லிசெட்டி பாளையத்தில், த.பெ.தி.கவினர் கோழி குழம்பு சமைத்து பொதுமக்களுக்கு பரிமாறினர்.


கோவை அன்னூர் அருகே சூரிய கிரணத்தின் மீதான மூடநம்பிக்கைகளை போக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோழி கறி குழம்பு சமைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.



சூரிய கிரகணம் என்ற வானியல்செயல்பாடு நேற்று (25.10.2022) மாலை 2:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்ந்தது. சூரிய கிரகணம் தொடர்பாக பல்வேறு விதமான அச்சங்களும், மூடநம்பிக்கைகளும்பொது மக்களிடம் இருந்து வருவதாக பகுத்தறிவாளர்கள் தரப்பில் விமர்சிக்கப்படுகிறது.

இது போன்ற மூடநம்பிக்கைகளை கண்டு அச்சப்படத் தேவையில்லை. சாதாரண வானியல் நிகழ்வாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். உலகம் சூரிய கிரகணத்தை ஒரு அறிவியல் சார்ந்த விஷயமாகவே கருதுகிறது. இதனால் பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சப்பட வேண்டாம் என திராவிட அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், அன்னூர் அடுத்த நல்லிசெட்டிபாளையம் பகுதியில் சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோழி குழம்பு மற்றும் சோறு சமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கினர். மேலும் அவர்களும் உண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...