பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா காப்புகட்டுதலுடன் கோலாகமாக துவங்கிய நிலையில், வரும் 30-ல் சூரசம்ஹாரம், 31-ல் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் நேற்றைய தினம் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவையொட்டி கோயில் யானை 'கஸ்துாரி' மலைக் கோயிலுக்குவரவழைக்கப்பட்டது.
இதையொட்டி நடந்த உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், மயில் வாகனம், நவவீரர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதுபோல் திருஆவினன்குடி கோயிலில் மூலவர், உற்சவருக்கும் காப்பு கட்டப்பட்டது.
இதை தொடர்ந்து பக்தர்கள் சஷ்டி விரதத்தை துவங்கினர். பக்தர்கள் மதியம் 12:00 மணி வரை மலைக்கோயில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், சூரிய கிரகணம் காரணமாக மதியம் 2:30 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
இதனையடுத்து இரவு 7 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு சம்ரோட்சன பூஜை மற்றும் சாயரட்சை பூஜை நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவானது வரும்அக்டோபர் 31ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின்முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 30ஆம் தேதியும், திருக்கல்யாணம் 31ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் சூரசம்ஹார விழாவின் தொடக்கமாக பிற்பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பின்னர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடந்தபின் கோயில் நடை சாத்தப்படும்.
இதனையடுத்து பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேவசேனா, முத்துக்குமார சுவாமி மயில்வாகனத்தில் அடிவார திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆரியர் மண்டபத்தில் இரவு 9 மணிக்கு சம்ரோட்சன பூஜைக்கு பின் அர்த்தஜாம பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அக்டோபர் 31ஆம் தேதிகாலை 9:30 மணிக்கு மலைக்கோயிலிலும் இரவு 7:00 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலிலும் வள்ளி, தேவசேனா, முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.