கோவை கார் வெடித்த வழக்கு: உயிரிழந்த முபின், கைது செய்யப்பட்டுள்ள நவாஸ், ஃபெரோஸ் ஆகியோர் ஐ எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அனுதாபிகள் என்று தகவல்

கார் வெடித்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக உயிரிழந்த முபின் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள இருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அனுதாபிகள் என்று தெரியவந்துள்ளது. எனவே, வழக்கு என்.ஐ ஏ விடம் ஒப்படைக்கப்படுமா..? என்று கேள்விகள் எழுந்துள்ளன.


கோவை: கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் உள்ள சிலிண்டர் வெடித்துவிபத்துக்குள்ளாகி முபின் என்ற நபர் பலியானார். இந்த நிலையில் காரில் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பலியான முபீன் வீட்டில் வெடி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அவர் சதி செயலுக்கு முயன்றுள்ளார் என்பதைபோலீசாருக்கு உறுதிப்படுத்தியது.

வழக்கின் தொடர்ச்சியாக, தனிப்படை போலீசாரின் விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐவர் - நவாஸ், ஃபெரோஸ், தல்கா, ரியாஸ், இஸ்மாயில் உள்ளிட்டோர் உபா உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைதாகினர்.

இந்த நிலையில், கைதான நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கார் விபத்தில் பலியான முபீன், நவாஸ், ஃபெரோஸ் ஆகிய மூவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அனுதாபிகள் என்பதும் ஆனால் அவர்கள் அந்த அமைப்புடன் நேரடி தொடர்பில் இல்லை என்றும்தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், முபீன் கேரளா வீயூர் சிறையில் உள்ள சிலரை சந்தித்ததாக கூறப்படுகின்றது. அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு அஜ்மத் அலி என்ற நபரை சந்தித்து பேசியிருக்கின்றார். முபீன் சந்தித்து பேசிய அஜ்மல் அலி என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்.

இந்த நிலையில், வியூர் சிறைக்கு சென்ற முபின் அங்கு யார் யாரையெல்லாம் சந்தித்தார் ? எப்போதெல்லாம் சந்தித்தார் ? உடன் யார் இருந்தார்கள் ? என்பதை அறிய வியூர் சிறை வருகை பதிவேடு மற்றும் சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர்.

மேலும், தேசிய முகமை அதிகாரிகள் கோயமுத்தூருக்கு நேற்று வந்துள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மாலை அல்லது நாளை தேசிய முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கின் கீழ் கைதான நபர்கள் மீது உபா சட்டம் பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...