திருப்பூர் - புதுமார்க்கெட் வீதியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு படையெடுத்த மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்ததன் காரணமாக திருப்பூர் - புதுமார்க்கெட் பகுதி முழுவதும் பொதுமக்கள் நெரிசல் அளவுக்கு அதிகமாக காணபட்டது.


திருப்பூர்: தமிழகத்தின் முன்னணி பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.



தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக அனைத்து பெரும்பான்மையான பனியன் நிறுவனங்களிலும் போனஸ் வழங்கப்பட்டுவிட்டது.



இந்நிலையில் பண்டிகைக்கு தேவையான புத்தாடை, பட்டாசுகள், பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்க திருப்பூர் புதுமார்கெட் வீதி, காமராஜர் சாலை, குமரன் சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.



மேலும் குமரன் சாலை, பல்லடம் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.



திருப்பூர் மாவட்ட, மாநகர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...