பல்லடம் அருகே இந்து முன்னணி நிர்வாகி மீது கொலைவெறி தக்குதல் - பாஜக நிர்வாகி கைது

பல்லடம் அருள்புரம் பகுதியில் முன்பகை காரணமாக இந்து முன்னணி நிர்வாகி ராஜசேகர் என்பவர் மீது கொலைவெறி தக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி குருமூர்த்தி மற்றும் அவரது நண்பர்களை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தது.


திருப்பூர்: பல்லடம் அருள்புரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர். இவர் இந்து முன்னணி கட்சியின் ஒன்றிய குழு பொதுச்செயலாளராக உள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் பாஜக பல்லடம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் குருமூர்த்தி மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்

இந்நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ராஜசேகர் நன்கொடை கேட்டு குருமூர்த்தி மொபைல் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த கடையில் வேலை செய்யும் நபர் பணம் தர மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.



அப்போது ராஜசேகர் கடையின் கண்ணாடிகளை உடைத்து அந்த நபரையும் தாக்கினார்.

இது குறித்து குருமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இதனையடுத்து முன்பகை காரணமாக நேற்று மதியம் குருமூர்த்தி மற்றும் அவரது நண்பர்களான ரகுமான், கிஷோர், புகழ், அனிருத், சந்திரமோகன், லோகேஷ், பிரவின் ஆகியோர் 10 கொண்ட கும்பல் உப்பிளிபாளையம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ராஜசேகரை வழிமறித்து கொலை வெறியுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் ராஜசேகரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பல்லடம் போலிசாருக்கும் தகவல் அளித்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் குருமூர்த்தி உட்பட அவரது நண்பர்கள் புகழ், கிருஷ்ணா, சந்தோஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



மேலும் தலைமறைவாகியுள்ள மீதமுள்ள நபர்களை பல்லடம் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.



தாக்குதலின் போது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...