தமிழக முதல்வரின் போதை ஒழிப்பு தீர்மானம் கண் துடைப்புதான் - 'மோடியின் மகள்' திட்டம் நிகழ்வில் வானதி சீனிவாசன் உரை

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் இன்று ”மோடியின் மகள்” திட்டத்தின் கீழ் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை அளிக்கும் நிகழ்ச்சியானது இன்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.



கோவை: மக்கள் சேவை மையம் சார்பில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்விற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வின் இறுதியில் செய்தியாளரகளை சந்தித்து பேசிய அவர்:-

கல்வி கற்ற குழந்தைகளுக்கும், திறமை படைத்த குழந்தைகளுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் வருடம் முழுவதும் அவர்களுடன் தொடர்பிலிருந்து அவர்களின் நலனை பேணி காக்க உள்ளதாக தெரிவித்தார்.

90% சதவீதம் ஆண்கள் இறக்க மதுவே காரணம் தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடைகளை திறந்து இளம் விதவைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது. எனது தொகுதிக்குட்பட்ட தெற்கு தொகுதியில் கூட மார்க்கெட் பகுதியான ஒப்பணக்கார வீதி பகுதியில் மதுக்கடையை திறந்துள்ளார்கள்.

தமிழக முதல்வரின் போதை ஒழிப்பு தீர்மானம் கண் துடைப்புதான். மதுவால் 40 வயதுக்குள் இறந்த ஆண்களின் குடும்பத்தை மதுக்கடையை நடத்தும் மாநில அரசு தான் ஏற்று நடத்த வேண்டும். அதற்கு பாஜக குரல் கொடுக்கும் தமிழக அரசு இதுபோன்ற குடும்பங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

குறைந்தபட்சம் தீபாவளி அன்றைக்காவது குடும்பம் நிம்மதியாக இருக்க தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மது விற்பனைக்கு இலக்கை வைப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது.

திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்களின் பிள்ளைகள் இந்தி கற்றுக் கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் யார் ஏமாற்றப்படுகிறார்கள் என்றால் அரசாங்க பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகள் தான் தமிழக அரசுக்கு இன்னொரு மொழியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை என கூறினார்.

தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இதைத்தான் புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. மோடி மருத்துவக் கல்வி உட்பட அனைத்து படிப்புகளையும் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார் ஏன் முதல்வர் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முயற்சி எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...