வால்பாறை தேயிலை தோட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த ட்ராக்டர் - வடமாநில தொழிலாளி படுகாயங்களுடன் மீட்பு

கோவை வால்பாறை தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிப்பதற்காக வந்த ட்ராக்டர் கட்டுப்பாட்டை இழந்து மலை பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளி காட்டு பகுதியில் இருந்து மீட்கபட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.



கோவை: வால்பாறை அருகே மானிக்கா எஸ்டேட் பகுதியில் காலை 8 மணி அளவில் தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிப்பதற்காக எஸ்டேட் மருந்து கிடங்கில் இருந்து வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகிய இருவரும் டிராக்டர் மூலம் வந்துள்ளனர்.

அவர்கள் மருந்தை எடுத்து கொண்டு 38 ம் நம்பர் தோட்டத்திற்கு சென்று உள்ளனர். டிராக்டரை வட மாநில தொழிலாளி சஞ்சய் இயக்கியதாக கூறப்படுகிறது. மலைப்பாதையில் செல்லும் பொழுது ட்ராக்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மலை பாதையில் இருந்ந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது.



இதில் வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகியவர்கள் பலத்த காயங்களுடன் காட்டிற்குள் விழுந்தனர். டிராக்டர் மலையில் விழுந்ததில் சுக்குநூறாக உடைந்துள்ளது.



தேயிலை தோட்டத்தில் வேலைக்கு வந்தவர்கள் டிராக்டர் விழுந்த சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முருகன் என்பவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது ஆனால் டிராக்டர் இயக்கிய சஞ்சய் பலத்த காயம் அடைந்து உள்ளார். இவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுள்ளனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...