கோவையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல முண்டியடிக்கும் மக்கள் - பேருந்துகளில் இடம்பிடிக்க அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்காக பொதுமக்களும், மாணவ - மாணவிகளும் அலைமோதுவதால், கூடுதல் பேருந்துகளை இயக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.


கோவை: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.



இந்நிலையில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் பேருந்துகளில் இடம் பிடிக்க மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.



இன்று கல்லூரிகள் அனைத்தும் முடிந்த நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியாக தங்கி படிக்கும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் சொந்த ஊர் செல்கின்றனர்.



இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கல்லூரிகள் மாலை முடிந்த உடன் மாணவ மாணவிகள் சொந்த ஊருக்கு பேருந்துகளிலும் ரயில்களிலும் திரும்பி வருகின்றனர்.



இதனால் கோவை மாவட்டத்தில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களில் மாணவர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்படுகிறது.



காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் பேருந்து நிலையத்திற்கு வெளியே என மாணவர்கள் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.



இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்து நிலையத்திற்குள் நுழையும் முன்பே மாணவர்கள் பேருந்தை வழிமறித்தவாறு பேருந்தில் அவர்களது உடைமைகளை கொண்டு இடம் பிடித்தனர். இதனால் பெருமளவில் சலசலப்பும் அதிகபட்சமான தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், பேருந்து ஏறுவதில் ஏற்படும் ஒழுக்க கெடுகளை சரியான முறையில் ஒழுங்குபடுத்தவும், கூடுதல் பேருந்துகளை இயக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...