கால்நடை வளங்களை ஊக்குவிக்கும் வகையில் கொங்குநாடு கால்நடை திருவிழா பொள்ளாச்சியில் துவக்கம்


வாணவராயர் அறக்கட்டளையின் சார்பில் விவசாயிகளின் வாழ்வாதாரம், வேளாண்மை மற்றும் கால்நடை வளங்களை ஊக்குவிக்கும் வகையில் 'கொங்குநாடு கால்நடை திருவிழா' பொள்ளாச்சியில் துவக்கம்.



இவ்விழாவின் நோக்கம் தற்போது நம் மண்ணின் கால்நடை செல்வங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவ்வாறான  கால்நடைகளின் கலாச்சார பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைப்பதோடு நில்லாது இவ்வளம் குன்றாதிருக்க விஞ்ஞான ரீதியான அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும்.



இவ்வருடம் தொடர்ந்து 3 வது முறையாக பொள்ளாச்சி சமத்தூரில் இன்று துவங்கிய இவ்விழாவில் தென்னிந்தியா முழுவதிலிருந்தும் 1300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 108 கோமாதாக்களை கொண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.



மேலும், இதில் வேளாண்மை மற்றும் வீட்டு விலங்குகள் தொடர்பான கண்காட்சியும், ஆடு, மாடு, குதிரைகளின் அழகு போட்டியும், இதர கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதைத்தொடர்ந்து, கொங்குநாடு கால்நடை திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு கால்நடைகளுக்கான தீவனம், விவசாயப் பொருட்கள், கால்நடைகளுக்கு என சிறப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.



Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...