தமிழகத்தில் நிறைவேறியது 'ஆன்லைன்' சூதாட்டத் தடைச் சட்ட மசோதா சட்டசபை கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார்

நாடு முழுக்க பல்வேறான சிக்கலையும் மனவிரக்தியையும் அதிகரிக்க வைத்த 'ஆன்லைன்' சூதாட்டத்தை நிரந்தர தடை செய்தது தமிழக அரசு. மூன்று நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.


சென்னை: தமிழ்நாட்டில், ஆன்லைன் சூதாட்டங்களில் சிக்கிப் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தின் மீதான மோகம் காரணமாகப் பணத்தை இழக்கும் இளைஞர்கள், மன விரக்தியில் விபரீத முடிவெடுக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 6-ம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சட்டசபை கூட்டத்தொடரில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்து அரசுக்கு அறிவுரை வழங்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவானது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள், கருத்து பகிர்வோரிடம் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு சட்டம் தயாரித்தது.

இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த ஜூன் 27ம் தேதி சமர்ப்பித்தது.

ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு கடந்த செப்.26ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் இந்த அவசரச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9ம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார்.

மூன்று நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத்தில், 'ஆன்லைன்' சூதாட்டத் தடை சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

'ஆன்லைன்' சூதாட்டத் தடை சட்ட மசோதா கூறுபவை:-

1. இந்த சட்டமானது பணம் அல்லது பிற பந்தயப் பொருட்கள் வைத்து, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் நபருக்கு மூன்று மாதம் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கபடும்.

2. ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஊடகங்களில் விளம்பரம் செய்யும் அல்லது விளம்பரம் செய்ய காரணமாக இருக்கும் நபருக்கு, ஓராண்டு வரை சிறை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

3. ஆன்லன் சூதாட்டத்திற்கு சேவை வழங்குகிற நபருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க இச்சட்டம் வழிவகை செய்யும் என ஆன்லைன்' சூதாட்டத் தடை சட்ட மசோதா கூறுகிறது

இனியாவது பண இழப்புகளால் ஏற்படும் மனித இழப்புகள் நேராமல் இருக்கட்டும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...