கோவை மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ சானிட்டரி நாப்கின்‌ எரியூட்டும்‌ இயந்திரத்தை மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ வழங்கினார்

கோவை YUVA FOUNDATION சார்பில்‌ பள்ளிகளில்‌ மாணவியர்கள்‌ பயன்பாட்டிற்கு அளிக்கபட்ட சானிட்டரி நாப்கின்‌ எரியூட்டும்‌ இயந்திரங்களை மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ வழங்கினார் மற்றும் ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி பள்ளியினை ஆய்வு செய்தார்.


கோவை: மேற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.71க்குட்பட்ட ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ நடைபெற்ற விழாவில்‌ YUVA FOUNDATION சார்பில்‌ ரூ.7.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 25 மாநகராட்சி பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவியர்கள்‌ பயன்பாட்டிற்கு சானிட்டரி நாப்கின்‌ எரியூட்டும்‌ இயந்திரத்தை மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ வழங்கினார்.



மாநகராட்சி ஆணையாளா்‌ நிகழ்வில் பேசியதாவது:-

பெண்‌ கல்வியை சிறந்த முறையில்‌ ஊக்குவிக்க வேண்டும்‌ என முதலமைச்சர் அறிவுறுத்தியதை தொடர்ந்து, பள்ளிக்‌ கல்வி துறைக்கு ரூ.2 ஆயிரம்‌ கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அறிவித்துள்ளார்கள்‌.

தனியார்‌ பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளிகள்‌, அரசு பள்ளிகள்‌ திகழ வேண்டும்‌. எனவே, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பள்ளியில்‌ பயிலும்‌ மாணவிகளுக்காக Yuva Foundation சார்பில்‌ ரூ.7.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 25 மாநகராட்சி பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவியர்கள்‌ பயன்பாட்டிற்கு சானிட்டரி நாப்கின்‌ எரியூட்டும்‌ இயந்திரம்‌ வழங்கப்பட்டுள்ளது.



மேலும்‌, அனைத்து மாநகராட்சி பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவிகளின்‌ கல்வி எந்த வகையிலும்‌ பாதிக்காமல்‌, அவர்கள்‌ உயர்ந்த நிலைகளுக்கு வரவேண்டும்‌ என்பதற்காகவும்‌, ஆண்களுக்கு நிகராக கல்வியில்‌ பெண்கள்‌ திகழ வேண்டும்‌.

மாணவிகள்‌ கல்வியில்‌ சிறந்து விளங்கி, எதிர்காலத்தில்‌ உயர்ந்த நிலைக்கும்‌, பல்வேறு துறைகளில்‌ சிறப்பாக பணியாற்றி மாநகராட்சிக்கும்‌, கோவை மாவட்டத்திற்கும்‌ முன்னோடியாக விளங்கி பெருமை சோக்க வேண்டும்‌.

மேலும்‌ மாநகராட்சி சார்பில்‌ YuvaFoundation நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌.” என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்தார்.

அதனைத்‌ தொடர்ந்து ஆணையர் மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.72க்குட்பட்ட ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி பள்ளியினை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



ஆய்வில் மாதிரி பள்ளியாக மாற்றிட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல்‌ பெற்று விரைவில்‌ பணிகளை மேற்கொள்ளவும்‌,

மேலும் அருணாச்சலம்‌ சாலை பகுதியில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்திடவும்‌,

அப்பகுதியில்‌ புதிய மழைநீர் வடிகால்‌ அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரித்திடவும்‌ மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷா்மிளா ‌, மேற்கு மண்டல தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, நகரமைப்பு குழு தலைவர்‌ சோமு (௭ சந்தோஷ்‌, பணிகள்‌ குழு தலைவர்‌ சாந்தி முருகன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அழகு ஜெயபாலன்‌, கார்த்திக்‌ செல்வராஜ்‌, ராமமூரத்தி, அங்குலட்சுமி, உதவி ஆணையாளர்‌ சேகர்‌, கல்வி அலுவலர்‌ (பொ) ஏங்கநாதன்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ கலாவதி, உதவி பொறியாளா்‌கமலக்கண்ணன்‌, பள்ளி உதவி தலைமையாசிரியர்‌ ஸ்ரீகலா மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ கலந்து கொண்டார்கள்‌

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...