கோவையில் 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த போக்சோ வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மதுக்கரை அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போக்சோ வழக்கு குற்றவாளி பால்ராஜ் மீது கோவை ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.


கோவை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் பால்ராஜ் (33). இவர் கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சமீபத்தில், பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட நபர் பாலியல் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து குற்றவாளி பால்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ஆட்சியர் சமீரன் பரிந்துரை செய்திருந்தார்.

இதனை ஏற்று குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி பால்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...