ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து கிணத்துக்கடவு மலுமிச்சம்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர் .
எடப்பாடி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டியில் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பொள்ளாச்சி கோவை சாலையில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை கலைத்தனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, ஒத்தக்கால் மண்டபம் நகரச் செயலாளர் ரமேஷ்,செட்டிபாளையம் நகர செயலாளர் கண்டியப்பன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.