கோவை மாநகர மேயர் மற்றும் ஆணையர் தலைமையில் இன்று சாதாரண மாமன்ற கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் ஆணையாளர் பிரதாப் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த மாமன்ற கூட்டத்தில் புதிய சொத்து வரி அமல்படுத்துவது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன் முன்மொழிந்தார்.

இதற்கு மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்த நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.