கோவையில் அரசு சிறப்புச் செயலர் ஹர் சஹாய் மீனா தலைமையில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து மண்டல அளவிளான ஆலோசனை கூட்டம்

நிலையான நீர் மேலாண்மையின் வாயிலாக அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட இலக்குகளை அடைவது குறித்து கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை, அரசு சிறப்புச் செயலர் ஹர் சஹாய் மீனா தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் திட்டம் (ம) வளர்ச்சித் துறை, அரசு சிறப்புச் செயலர் ஹர் சஹாய் மீனா தெரிவித்ததாவது, 2030 ஆம் ஆண்டுக்குள் கல்வி, பொது சுகாதாரம், பாலின வேறுபாடுகளை அகற்றுதல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் போன்றவைகளில் நீடித்த நிலையான வளர்ச்சியை அடையும் நோக்கில் ஐக்கிய நாடுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபையால் 17 இலக்குகள் இத்தீர்மானத்தின்படி, நீடித்த நிலையான வளர்ச்சியை அனைத்து மாவட்டங்கள், வட்டாரங்களிலும் அடைய வேண்டுமென்றும், தமிழ்நாடு உலக அளவில் வளர்ச்சிப் பாதையில் சென்றிடன்வேண்டும் என்ற நோக்கத்துடனும், மக்கள் நலத்திட்டப் பணிகளை, அரசு மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டங்களில் மூலம் மாவட்டம்/ வட்டாரங்களில் ஏற்பட்டுள்ள நீடித்த நிலையான வளர்ச்சியை கண்காணித்து தர வரிசை வழங்கும் பொருட்டு மாவட்ட வாரியான குழுக்கள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.



நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனைகள் ஒவ்வொரு மண்டலமாக கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான கூட்டம் நடைபெறுகிறது.

வளர்ச்சியின் இலக்குகளை நாடு முழுவதும் அடையவதற்கு, கிராம அளவில் கொண்டு செல்வது குறித்தும், இந்த இலக்குகளை உள்ளடக்கிய கிராம ஊராட்சிகளில் வளர்ச்சிகளை அளவிடக்கூடிய 93 ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இலக்குகள்

அனைத்து வகையிலான ஏழ்மையை ஒழித்தல், பட்டினியை ஒழித்தல், உணவு பாதுகாப்பையும் ஊட்டச்சத்து மேம்பாட்டையும் அடைதல், நிலையான வளங்குன்றா வேளாண்மையை மேம்படுத்துதல், அனைவருக்கும் அனைத்து வகையிலும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்தல் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான, தரமான கல்வியை உறுதி செய்தல் மற்றும் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்றலுக்கான வாய்ப்பினை ஊக்குவித்தல், பாலின சமத்துவத்தை எய்துதல் மற்றும் அனைத்து பெண்களும், பெண் குழந்தைகளும் அதிகாரமடைய செய்தல், நிலையான நீர் மேலாண்மையின் வாயிலாக அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்தல், பெறத்தக்க விலையிலான, நிலையான, தூய எரியாற்றலை அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்தல், அனைவரையும் உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சியையும், முழுமையான, ஆக்கப்பூர்வமான மற்றும் கண்ணியம் மிக்க வேலைவாய்ப்பையும் அனைவருக்கும் வழங்குதல், நெகிழ்திறன் மிக்க உட்கட்டமைப்பை உருவாக்குதல் அனைத்தையும் உள்ளடக்கிய நிலையான தொழில்மயமாதலையும் மற்றும் புதுமை முயற்சிகளையும் வளர்த்தெடுத்தல்.

நகர்ப்புற மேம்பாடு, பருவநிலை மாறுபாட்டையும் அதன் தாக்கங்களையும் எதிர்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அவற்றின் நீடித்த வகையிலான உடனடி நில சூழலியலை பாதுகாத்து, மீட்டெடுத்து பயன்பாட்டை ஊக்குவித்தல் நிலையான வன மேலாண்மை, பாலைவனமாதலுக்கான எதிர் நடவடிக்கை நிலச் சீர்கேட்டை தடுத்து, மீட்டெடுத்தல் மற்றும் பல்லுயிர் இழப்பை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட இலக்குகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வனங்களில் ஆலமரம், புளி, அத்தி உள்ளிட்ட கனி மரங்களை நட்டு வனப்பகுதிகளை மேம்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் உபயோகத்தினை முற்றிலும் தவிர்க்கும் வகையில், முதலமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இந்த இலக்குகளை விரைந்து அடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்கள் திட்டம் (ம) வளர்ச்சித் துறை, அரசு சிறப்புச் செயலர் ஹர் சஹாய் மீனா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், ஈரோடு ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, நீலகிரி ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஆலோசகர் ஆர்.சுஜாதா, மாவட்ட வன அலுவலர் திரு.அசோக்குமார், மண்டல இணை இயக்குநர் (பொ) புள்ளியியல் துறை அமுதவள்ளி, புள்ளியியல் துணைஇயக்குநர்கள் இசக்கியப்பன், ஜான்சுந்தர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...