எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து கோவையில் அதிமுகவினர் திடீர் சாலை மறியல் - பரபரப்பு..!

சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவி குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

,


கோவை: சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி சட்டப்பேரவையில் நேற்றைய தினம்,அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.



இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள்சென்னையில் இன்றும் சட்டமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் காவல்துறையினரால் கைது செய்யபட்டனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் தர்ணா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடிய அதிமுகவினர் கட்சி கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகேசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில், அதிமுக எதிர்கட்சி தலைவர் உள்பட அதிமுகவினரை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

அதிமுகவினரின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...