கோவையில் தீபாவளி விழாக்கால சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பயணிகளுக்கான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.


கோவை: தீபாவளி பண்டிகை நெருங்க உள்ளதை தொடர்ந்து மக்கள் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் ஊர்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் தீபாவளி விழாக்கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்தும், காந்திபுரம் உக்கடம் சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்தும் அதிகளவு பேருந்துகள் இயக்கப்படும், அதே சமயம் கொடிசியா மைதானத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.



அதன்படி, தற்போது மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம் சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் இயங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், குடிநீர் வசதிகள் போன்றவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...