தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

தமிழ்நாடு நாளை முன்னிட்டு கோவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


கோவை: தமிழ்நாடு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகியவை நடத்தபட்டது.

கோவை மாவட்டத்திலும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் போட்டிகள் நடத்தபட்டன. அதில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டு சான்றிதழ்களையும் ரொக்கப்பரிசினையும் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.



பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற அன்னூர் கே.ஜி பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி நிவேதிதாவுக்கும், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.கே.ரங்கம்மாள் கல்வி நிலையம் மேல்நிலை பள்ளியின் 12ம் வகுப்பு மாணவி ஹேமலதாவிற்கும், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில், வெற்றி பெற்ற கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளி, 12ம் வகுப்பு மாணவி ரோஹினி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீ இராமகிருஷ்ணாமிஷின் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி இளநிலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவர் இராபின் ஜோஸ்வா ஆகியோருக்கு முதல் பரிசாக தலா 5000 ரூபாய் காசோலையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தலா 3000 ரூபாய் காசோலை சான்றிதழ்கள். மூன்றால் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தலா 2000 ரூபாய் காசோலை மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசாக 2000 ரூபாய் காசோலை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...