முன்னாள் படை வீரர்கள், அசல் படை விலகு சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் 18 மாத கால சலுகையை பயன்படுத்தி தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்து, உரிய காலத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேலைவாய்ப்பு பதிவு செய்யாதவர்கள் மற்றும் பதிவை புதுப்பிக்க தவறிய 55 வயதுக்குள் உள்ள முன்னாள் படை வீரர்கள், 18 மாத கால அளவு சலுகையை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பதிவு செய்து பயன்பெறலாம்.
இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய, அசல் படை விலகு சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தினை நேரில் அணுகலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.