பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் - திருப்பூரில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் நூதன ஆர்ப்பாட்டம்

சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், கலப்பு தீவனத்திற்கு மானிய விலை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அவை பின்வருமாறு,

மாடு வளர்ப்புக்கு தேவையான தீவண பொருட்களான பருத்திக்கொட்டை,புண்ணாக்கு, கலப்பு தீவனம் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. சோளத்தட்டு உள்ளிட்ட தீவன உற்பத்தி செலவுகள் அதிகரித்து விட்டது.

இதன் காரணமாக மாடு வளர்ப்பு என்பது அதிக பொருட்செலவை பிடிக்கிறது. 2019ஆம் ஆண்டுக்கு பின் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வில்லை. தற்போது பால் விலை லிட்டருக்கு 22 ரூபாய் முதல் அதிக கொழுப்புள்ள பாலுக்கு 28 ரூபாய் வரை கொள்முதல் விலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விலை கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்துவதால் தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

அதாவது, பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 41 ரூபாயாகவும், எருமைப்பால் லிட்டர் 52 ரூபாய் எனவும்உயர்த்தி வழங்க வேண்டும், கலப்பு தீவனத்திற்கு மானிய விலை வழங்க வேண்டும்

இவ்வாறான கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...