உலக உடற்காய தினம்: உறுதிமொழி ஏற்றுக் கொண்ட கோவை மாவட்ட காவல்துறையினர்

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தலைமையில், உலக உடற்காய தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


கோவை: ஆண்டுதோறும் அக்டோபர் 17ஆம் தேதி உலக உடற்காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான காலக்கட்டத்தில் உயிரை பாதுகாத்து, உடற்காயங்களால் உண்டாகும் மரணத்தை தவிர்த்து, உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக உடற்காய தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், தலைமையில் உலக உடற்காய தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில், சாலை விபத்துகள், தீ விபத்துகள், கட்டிட இடிபாடு போன்ற பல்வேறு விபத்துகளால் நமக்கு உடற்காயங்கள் ஏற்படுகிறது, இதனால் நமது உறவினர்களும் நண்பர்களும் பாதிக்கப்படுவதுடன் அவர்களுக்கு உடல் உறுப்புகள் பாதிப்பும், மன பாதிப்புகள்ஏற்படுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம் என்றும், சாலை விபத்துகளில் காயம் அடைந்தோருக்கு முதலுதவி செய்தும் அவர்களது உயிரை காப்பாற்றுவதற்கு முக்கிய பங்காற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர், காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உடற்காய தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...