கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் 10 லட்சம் பேர் பயணித்து உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2 லட்சம் பேர் பயணம் செய்ததாகவும் தகவல்.
கோவை: கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்து இரண்டும் சேர்த்து தினமும் சராசரியாக 23 அல்லது 24 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நிலையான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
இதுதொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, தற்போது கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், பூனே, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கும் சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா உள்ளி்ட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.
ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமானத்தில் வியட்நாமிற்கு இணைப்பு முறையில் விமான சேவை கூடுதலாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மாதந்தோறும் பயணிகள் எண்ணிக்கையில் நிலையான வளர்ச்சி காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 9,69,185 பேரும், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 78,232 பேரும் என மொத்தம் 10,47,417 பேர் பயணித்துள்ளனர்.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 1,95,338 பேரும், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 15,782 பேரும் என மொத்தம் 2,11,120 பேர் பயணித்துள்ளனர்.
கொரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான், ஒரே மாதத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.
அடுத்த 2 மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து நிலையான வளர்ச்சியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.