உலக விபத்து காய தினம்: கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி - ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்

உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற பேரணியில், மருத்துவமனை முதல்வர் நிர்மலா, பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



கோவை: ஆண்டுதோறும் அக்டோபர் 17-ஆம் தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக ஏற்படும் உடற்காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாள வேண்டிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது

இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சார்பில் உலக விபத்து காய தினத்தை அனுசரிக்கும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து விபத்து குறித்தும், விபத்து நேர்ந்தால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



இந்த பேரணியில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மருத்துவ கண்காணிப்பாளர் சிவக்குமார், இருப்பிட மருத்துவ அலுவலர், அவசர சிகிச்சை பிரிவு பேராசிரியர்கள் மற்றும் துறை தலைவர்கள், துணை பேராசிரியர்கள், துறை தலைவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



இந்த பேரணியில் நர்சிங் கல்லூரியை சேர்ந்த மாணவியர்களும் மற்றும் மருத்துவ மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.



உலக விபத்து தினம் இந்த வாரம் முழுவதும் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், விபத்துக்கு உள்ளானவர்களை காப்பாற்றுவதற்கான அடிப்படை பயிற்சிகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனையொட்டி, நாளைய தினம் (18.10.2022) லட்சுமி மில்ஸ் ஜங்ஷன் பகுதியில் காலை 10 மணி முதல் 12 மணி வரை மற்றும் 19ஆம் தேதி சுங்கம் சந்திப்பில் 2 மணி நேரம், 20 ஆம் தேதி மார்கெட் சந்திப்பு பகுதி, 21ஆம் தேதி அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக போக்குவரத்து சிக்னல் அருகே அடிப்படை முதலுதவி பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்தி விபத்து ஏற்படும் போதும், விபத்துக்கு உள்ளானவர்களின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விபத்துக்கு பிறகு உயிரை காப்பாற்ற செய்ய வேண்டிய வழிமுறைகள், விபத்துக்கு பிறகு உயிரைக் காப்பாற்ற செய்யக்கூடாத விஷயங்கள், அதேபோல் விபத்துகளில் கை கால் உடைந்து இருந்தால் உடனடியாக என்னென்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒவ்வொரு சாலை விபத்தின் போதும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அருகே உள்ள மருத்துவமனைக்கு விபத்து உள்ளானவர்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் விதமாக இந்த உலக விபத்து காய தினம் அனுசரிக்கப்பட்டது.

மேலும், இவ்வாறு விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபவர்கள் மீது எந்த பிரச்சனையும் வராது எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...