திருப்பூரில் அடகு வைத்த நகைகளுடன் மாயமான அடகு கடை உரிமையாளர் - பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பூர் பாரியூர் அம்மன் நகர் பகுதியில் இருந்த தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட நகைகளுடன் உரிமையாளர் மாயமான நிலையில், அவரை கைது செய்து நகைகளை மீட்டுத்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் பாரியூர் அம்மன் நகர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி கோல்டு பைனான்ஸ் என்ற நகை அடகு கடை செயல்பட்டு வந்தது. இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர்.



இந்நிலையில், அடகு கடைக்காரர் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருப்பதாகவும் இதுகுறித்து பலமுறை திருப்பூர் வீரபாண்டி மற்றும் பல்லடம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.



எனவே மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு, தங்களது நகைகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...