கோவை ரயில்நிலையம் அருகேயுள்ள சாலையில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பள்ளம் - போக்குவரத்து பாதிப்பு

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் கடந்த ஜனவரியில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு பணிகள் முடிந்து சாலை அமைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு அந்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஸ்டேட்பாங்க் சாலையில் கடந்த ஜனவரி மாதம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டது. குடிநீர் குழாய் பதிக்கபட்ட பின்னர் குழி மூடப்பட்டு சாலை போடப்பட்டது. இதனிடையே கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ரயில் நிலையம் எதிரில் உள்ள சாலையில் நேற்றிரவு திடீரென பள்ளம் ஏற்பட்டது. சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள அந்த பள்ளத்தால் அவ்வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



அந்த திடீர் பள்ளத்தில் யாரும் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன.



குடிநீர் குழாய் பதித்த பின்பு சாலையை முறையாக போடாததன் காரணமாவே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டும் பொது மக்கள், உடனடியாக இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...